/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நகராட்சி துாய்மைப்பணி வாகனத்தில் டூவீலர் மோதி வாலிபர் காயம் கமிஷனருடன் பொதுமக்கள் வாக்குவாதம்

ADDED : மே 03, 2024 06:21 AM

தேனி: தேனி கே.ஆர்.ஆர்., நகரில் இருந்து புது பஸ் ஸ்டாண்ட் செல்லும் மெயின் ரோட்டில் துாய்மைப்பணி மேற்கொண்டிருந்த வாகனம் மீது வீரபாண்டியை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் 30, டூவீலரில் மோதியதில் காமடைந்தார். சம்பவ இடத்திற்கு சென்ற கமிஷனருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நகராட்சி துாய்மைப்பணியாளர்கள் கே.ஆர்.ஆர்., நகரில் இருந்து புது பஸ் ஸ்டாண்ட் செல்லும் மெயின் ரோட்டில் வனத்துறை அலுவலகம் செல்லும் சந்திப்பில் வாகனத்தை நிறுத்தி குப்பையை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வீரபாண்டியை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் 30, பாரஸ்ரோட்டில் இருந்து பஸ் ஸ்டாண்ட் நோக்கி டூவீலரில் சென்றார்.
டூவீலர் துாய்மைபணிக்காக நிறுத்தியிருந்த வாகனத்தின் இடது ஓரம் மோதியது. இதில் முத்துக்கிருஷ்ணன் இடது கையில் ரத்தகாயம் ஏற்பட்டது. நகராட்சி வாகனத்தின் முன் பக்க கண்ணாடி சேதமடைந்தது. அவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கமிஷனர் ஜஹாங்கீர்பாஷா சம்பவ இடத்திற்கு வந்து விபத்து பற்றி பணியாளர்களிடம் கேட்டுக்கொண்டிருந்தார்.அங்கு வந்த பொதுமக்கள் அப்பகுதியில் உள்ள வேகத்தடைகளால் விபத்துகள் தொடர்கிறது.
வேகத்தடைகள் இருப்பதே தெரியாத நிலை உள்ளது. அதனை அகற்ற வேண்டும். அல்லது அடையாள கோடுகள் வரைய வேண்டும் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கிருந்து கமிஷனர் புறப்பட்டு சென்றார்.