/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ரோட்டோர தடுப்பில் டூவீலர் மோதி பலி 1
/
ரோட்டோர தடுப்பில் டூவீலர் மோதி பலி 1
ADDED : மே 29, 2024 04:47 AM
பெரியகுளம், : சின்னமனூர் காந்திநகர் காலனியைச் சேர்ந்தவர் சங்கிலி ராஜேஷ் 24. அங்கிருந்து டூவீலரில் தனது உறவினர் பரத்வாசுடன் 14. டூவீலரில் வத்தலகுண்டு கோயிலுக்கு சென்றனர்.
டூவீலரை சங்கிலிராஜேஷ் ஓட்டினார். சின்னமனூர் திரும்பி செல்லும் போது பெரியகுளம் அருகே எ.புதுப்பட்டி பெட்ரோல் பங்க் அருகே ரோட்டோர தடுப்பில் டூவீலர் மோதியது.
இதில் படுகாயமடைந்த சங்கிலி ராஜேஷ், பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பரிசோதனை செய்த டாக்டர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னால் உட்கார்ந்திருந்த பரத்வாஜ் காயத்துடன் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வடகரை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.-