ADDED : ஜூன் 01, 2024 05:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: வீரபாண்டி உ.அம்மாபட்டி நடுத்தெரு சிலம்பரசன் 39.
ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள இவரது டூவீலரை மே 7 ல் இரவில் அப்பகுதியில் உள்ள அண்ணாமலை நகர் அருகே நிறுத்திவிட்டு, கவுமாரியம்மன் கோயில் திருவிழாவிற்கு சென்று வந்தார். அப்போது டூவீலர் காணவில்லை.
சம்பவம் நடந்து 23 நாட்கள் கழித்து நேற்று வீரபாண்டி எஸ்.ஐ.,யிடம் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து டூவீலரை தேடி வருகின்றனர்.