/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
டூவீலரில் புகையிலை கடத்தியவர் கைது
/
டூவீலரில் புகையிலை கடத்தியவர் கைது
ADDED : ஆக 06, 2024 05:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: போடி அருகே ரங்கநாதபுரம் காந்தி நகரை சேர்ந்தவர் கணேஷ் பாண்டியன் 42. இவர் நேற்று டூவீலரில் போடி - தேவாரம் மெயின் ரோட்டில் சென்றுள்ளார். போடி டவுன் எஸ்.ஐ., கிருஷ்ணவேணி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கணேஷ் பாண்டியன் ஒட்டி வந்த டூவீலரை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில், தடை செய்யப்பட்ட புகையிலை, கூல் லிப்ஸ் அடங்கிய 30 பண்டல்கள் விற்பனைக்காக கொண்டு சென்றது தெரிந்தது.
போடி டவுன் போலீசார் கணேஷ் பாண்டியனை கைது செய்து ரூ.25,100 ம், புகையிலை பண்டல்கள், டூவீலரையும் பறிமுதல் செய்தனர்.