/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பயன்பாட்டிற்கு வராத ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம்
/
பயன்பாட்டிற்கு வராத ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம்
ADDED : மார் 02, 2025 05:20 AM
சின்னமனூர்: சின்னமனூரில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டடம் இரு ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ளது.
சின்னமனூரில் நகர்ப்புற சுகாதார நிலையத்திற்கு கருங்கட்டான்குளத்தில் புதிய கட்டடம் கட்டப்பட்டது. இக் கட்டடம் கட்டி 2 ஆண்டுகளுக்கு முன்பு சுகாதாரத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. புதிய கட்டடம் இன்னமும் பயன்பாட்டிற்கு வராமல் பூட்டியே வைத்துள்ளனர்.
இது தொடர்பாக சுகாதாரத்துறையினர் கூறுகையில், கட்டடம் ஒப்படைத்துள்ளனர். ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான டாக்டர், நர்சு பணியிடங்கள் இன்னமும் அனுமதிக்கவில்லை.-
ரூபாய் பல லட்சம் செலவழித்து கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.