/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வீரபாண்டியில் அன்னதானம் கூடுதலாக வழங்க வலியுறுத்தல்
/
வீரபாண்டியில் அன்னதானம் கூடுதலாக வழங்க வலியுறுத்தல்
வீரபாண்டியில் அன்னதானம் கூடுதலாக வழங்க வலியுறுத்தல்
வீரபாண்டியில் அன்னதானம் கூடுதலாக வழங்க வலியுறுத்தல்
ADDED : மே 10, 2024 05:27 AM
தேனி: வீரபாண்டி கவுமாரிய்மன் கோயில் அன்னதான திட்டத்தில் திருவிழா காலங்களில் கூடுதல் பக்தர்களுககு அன்னதானம் வழங்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இக்கோயிலில் சித்திரை திருவிழா மே. 7 ல் துவங்கி 14 வரை நடத்து வருகிறது. கோயில் வளாகததில் தினமும் அக்னிசட்டி, ஆயிரம் கண் பானை, காவடி மா விளக்கு எடுத்து, அழகுகுத்தி மக்கள் நேர்த்தி கடன்களை நிவர்த்தி செய்து வருகின்றனர்.
அன்னதானத்திற்கு அலைமோதும் கூட்டம்:
திருவிழா இல்லாத நாட்களில் நாள்தோறும் 100 பேர் சாப்பிடும் அளவிற்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. தற்போது எட்டு நாட்களும் திருவிழா நடக்க உள்ளதால், திருவிழா பணியாளர்கள் தவிர்த்து, பக்தர்கள் பொது மக்கள் தினமும் 1500 பேர் சாப்பிடும் அளவிற்கு மதிய உணவு அன்னதானமாக வழங்கப்படுகிறது. திருவிழா காலங்களில் பக்தர்கள் அதிகம் கூடுவதால் அன்னதான திட்டத்தில் பங்கேற்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். மதியம் 12:00 மணிக்கு அன்னதானம் துவங்கி 2:00 மணிக்கு முடிந்து விடுவதால் ஏராளமானோர் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வது தொடர்கிறது. அதனால் திருவிழா முடியும் மே 14 வரை 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.