/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சுருளி அருவியில் வசதிகள் மேம்படுத்த வலியுறுத்தல்
/
சுருளி அருவியில் வசதிகள் மேம்படுத்த வலியுறுத்தல்
ADDED : ஜூன் 22, 2024 05:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பம்: சுருளி அருவியில்அடிப்படை வசதிகளின்றி சுற்றுலாப் பயணிகள் தவித்து வருகின்றனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள சுருளி அருவிக்கு தினமும் சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கையில் வருகின்றனர்.
அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளுக்கு குடிநீர், கழிப்பறை, உடை மாற்றும் அறை, தங்கும் விடுதி, உட்காருவதற்கு இருக்கைகள், ஒட்டல், அருவிக்கு செல்ல பேட்டரி கார் என எதுவும் இல்லை.
அருவிக்கு வரும் பயணிகளில் முதியவர்கள், குழந்தைகள், நோய்வாய்பட்டவர்களின் நிலை பரிதாபமாக உள்ளது.
எனவே சூழல் சுற்றுலா திட்டத்தை அமல்படுத்தி , சுற்றுலா பயணிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வனத்துறை முன்வர வேண்டும்.