/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்
/
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்
ADDED : மே 07, 2024 05:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: ஆண்டிப்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் மின்னல், சூறை காற்றுடன் பலத்த மழை பெய்தது.
இதில் முத்துக்கிருஷ்ணாபுரம், லட்சுமிபுரம், டி.வி. ரங்கநாதபுரம், ஜம்புலிப்புத்தூர், சண்முகசுந்தரபுரம், ஸ்ரீரங்கபுரம் உட்பட பல கிராமங்களில் விவசாயிகள் இறவை பாசன நிலங்களில் மக்காச்சோளம், சோளம், வாழை உள்ளிட்ட பயிர்கள் பலன் தரும் நிலையில் வளர்ந்திருந்தன. சூறைக்காற்றில் பல ஏக்கரில் இருந்த பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. சேத மதிப்பீடு இன்னும் முழுமை பெறவில்லை. மழை, சூறைக்காற்றில் பாதித்த பயிர்களுக்கு அரசு மூலம் நிவாரணம் கிடைக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.