/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
/
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
ADDED : ஏப் 28, 2024 05:22 AM

பெரியகுளம் : பெரியகுளம் ஒன்றிய அலுவலகம் அருகே சோத்துப்பாறை கூட்டு குடிநீர் திட்டம் குழாய் உடைந்து தினமும் ஏராளமான லிட்டர் குடிநீர் வீணாகிறது.
பெரியகுளம் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு காரணமாக குடிநீர் நீர் ஆதாரம் குறைந்து வருகிறது. குடிநீரை வீணாக்க வேண்டாம் என உள்ளாட்சி அமைப்புகள் பொது மக்களிடம் அறிவுறுத்தி வருகிறது. வடுகபட்டி பேரூராட்சி 15 வார்டுக்கு 17 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களுக்கு தாமரைக்குளம் கண்மாயில் போர்வெல் அமைத்தும், சோத்துப்பாறை கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து குடிநீர் வழங்கப்படுகிறது. சோத்துப்பாறை அணை கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து தினமும் வழங்க வேண்டிய 2 லட்சம் லிட்டர் குடிநீருக்கு பதிலாக 50 ஆயிரம் லிட்டர் மட்டும் வழங்கப்படுகிறது.
இதனால் குடிநீர் வடிகால் வாரியம் மீது கவுன்சிலர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பெரியகுளம் ஒன்றியம் அலுவலகம் அருகே சோத்துப்பாறை கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து தினமும் ஏராளமான லிட்டர் குடிநீர் வீணாகி ரோட்டில் தேங்குகிறது. ஒன்றிய அலுவலக நிர்வாகம் கண்முன்னே வீணாகி செல்லும் குடிநீரை தடுக்க முயற்சி எடுக்கவில்லை. இதனால் வடுகபட்டிக்கு செயற்கையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

