/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வைகை பிக்கப் அணை ஷட்டர்கள் மின் மோட்டாரில் இயக்க ஏற்பாடு
/
வைகை பிக்கப் அணை ஷட்டர்கள் மின் மோட்டாரில் இயக்க ஏற்பாடு
வைகை பிக்கப் அணை ஷட்டர்கள் மின் மோட்டாரில் இயக்க ஏற்பாடு
வைகை பிக்கப் அணை ஷட்டர்கள் மின் மோட்டாரில் இயக்க ஏற்பாடு
ADDED : ஜூலை 02, 2024 06:33 AM

ஆண்டிபட்டி : வைகை பிக்கப் அணையில் மதகுகளின் ஷட்டர்களை மின் மோட்டார் மூலம் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
வைகை அணையில் திறந்து விடப்படும் நீர் பெரிய பாலத்தை அடுத்துள்ள பிக்கப் அணையில் தேக்கப்படுகிறது. பின் அங்கிருந்து கால்வாய் மூலம் மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்கும், ஆற்றின் வழியாக மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பாசனத்திற்கும் தேவைக்கு ஏற்றபடி திருப்பிவிடப்படும். கால்வாயில் ஷட்டர்களை அடைத்து விட்டால் நீர் தானாக ஆற்றின் வழியாக செல்லும்படியாக நீர் தேக்கம் உள்ளது. மதகுகளின் ஷட்டர்களை நீர்வளத் துறை பணியாளர்கள் கைகளால் இயக்கி திறக்கவும் மூடவும் செய்து வந்தனர்.
இதில் காலதாமதம் சிரமங்கள் ஏற்பட்டதால் மின் மோட்டார் மூலம் இயக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வைகை அணை நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது: பாசனக்கால்வாயில் நீர் திறப்புக்காக மூன்று மதகுகள் உள்ளன. 10 அடி உயரம் 20 அடி அகலம் உள்ள மூன்று மதகுகள் மூலம் அதிகபட்சமாக வினாடிக்கு 2300 மில்லியன் கன அடி நீர் திறக்க முடியும். ஷட்டர்களை கைகளால் இயக்கி திறந்து மூடுவதில் ஏற்படும் சிரமங்களை தவிர்க்க மின் மோட்டார் மூலம் ஷட்டர்களை இயக்குவதற்கான வேலைகள் முடிந்துள்ளது. இன்னும் ஓரிரு நாளில் மின்மோட்டார் மூலம் ஷட்டர்களை இயக்கி கால்வாய் வழியாக நீர் வெளியேற்றப்படும் என்றனர்.