/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வரதராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்
/
வரதராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்
ADDED : பிப் 10, 2025 05:07 AM
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியம் டி.பொம்மிநாயக்கன் பட்டியில் ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸ்ரீ வரதராஜ பெருமாள் சுவாமி அருள்பாலிக்கும் இக்கோயில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. திம்மரசநாயக்கனுார், டி.பொம்மிநாயக்கன்பட்டி, மல்லையாபுரம், சின்னமல்லையாபுரம், பிள்ளைமுகம்பட்டி கிராம மக்கள் வழிபடும் இக்கோயிலில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்தது. சமீபத்தில் ஹிந்து அறநிலையத்துறை, நிர்வாக அறங்காவலர் ராம்குமார் ஏற்பாட்டில் கோயில் புனரமைப்புப் பணிகள் முடிந்தன.
இரு நாட்கள் நடந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் முதல் நாளில் மங்கள இசை, அனுக்ஞை, கணபதி ஹோமம், பூர்வாங்கம், முளைப்பாரி பெட்டி அழைத்து வரும் நிகழ்ச்சிகளுடன் முதல் கால யாக வேள்வி, வேத பாராயணம், மகாபூர்ணாஹூதி உள்ளிட்ட பூஜைகள் நடந்தன.
2ம் நாளில் மங்கள இசை, திருப்பள்ளி எழுச்சி, கோ பூஜை, 2ம் கால யாக வேள்வி பூஜைகள், நாடி சந்தானம், கடம் புறப்பாடு நிகழ்ச்சிகளுக்குப் பின் கோயில் கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

