/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
லட்சுமிபுரம் சீரடி அன்ன சாய்பாபா கோயிலில் நாளை வருஷாபிஷேகம்
/
லட்சுமிபுரம் சீரடி அன்ன சாய்பாபா கோயிலில் நாளை வருஷாபிஷேகம்
லட்சுமிபுரம் சீரடி அன்ன சாய்பாபா கோயிலில் நாளை வருஷாபிஷேகம்
லட்சுமிபுரம் சீரடி அன்ன சாய்பாபா கோயிலில் நாளை வருஷாபிஷேகம்
ADDED : மே 04, 2024 05:48 AM
தேனி,: தேனி பெரியகுளம் ரோடு லட்சுமிபுரம் சீரடி அன்ன சாய்பாபா கோயிலில் வருஷாபிஷேகம் நாளை காலை 9:00 மணிக்கு நடக்க உள்ளது.
இக்கோயிலில் வியாழக்கிழமைகளில் ஆரத்தி பூஜைகளும், அன்னதானமும் நடந்து வருகின்றன.
வாரந்தோறும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற ஒரு கைப்பிடி அரிசியை அங்கு வைக்கப்பட்டுள்ள அரிசி உண்டியலில் தானமாக செலுத்தி நேர்த்திக்கடன் வேண்டி கொள்வது வழக்கம். இந்த அரிசியை வாரந்தோறும் கோயில் நிர்வாகம் அன்னதானத்திற்கு பயன்படுத்துகிறது. நாளை பக்தர்களின் நலனுக்காக மஹா சித்த பிரம்ம யாகம் நடக்க உள்ளது. இந்த யாகத்தின் மூலம் தீராத வியாதிகள் தீரும், தொழில் தடைகள் நீங்கும், குழந்தைகளின் கல்வியில் வளர்ச்சியை காணலாம்.
ஆயுள் அதிகரிக்கும், திருமண தடைகள் நீங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. சிறப்பாக நடக்க உள்ள இந்த யாகம் நாளை காலை 7:35 மணிக்கு துவங்கி, காலை 9:00 மணி வரை நடக்கிறது.
யாக பூஜையை தவத்திரு சுந்தரவடிவேலு அடிகளார் தலைமையில் நடத்தி வைக்க உள்ளனர்.பின் அன்ன சாய்பாபாவிற்கு அபிஷேகம், ஆரத்தி பூஜைகள், அன்னதானம் நடக்க உள்ளது. பக்தர்கள் பங்கேற்று அன்ன சாய்பாபா அருள் பெற்றுச் சென்று பயனடையலாம் என கோயிலின் நிர்வாகி ராஜன் தெரிவித்துள்ளார்.