ADDED : செப் 12, 2024 05:28 AM
தேனி: தேனி வி.சி., கட்சி அலுவலகத்தில் மாவட்ட சிறப்பு செயற்குழு கூட்டம் நடந்தது. கிழக்கு மாவட்டச் செயலார் ரபீக் தலைமை வகித்தார்.
மேற்கு மாவட்டசெயலாளர் மதன், மண்டல துணைச் செயலாளர் சுருளி, மாவட்ட துணைச் செயலாளர் ஆரோக்கியசாமி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் செல்லத்தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கள்ளக்குறிச்சியில் அக்.2ல் வி.சி.க., மகளிர் அணி சார்பில் நடக்க உள்ள மது,போதைப் பொருள் ஒழிப்பு மாநாட்டில் திரளாக கட்சியினர் செல்வது, செப்., 20ல் மதுரையில் நடக்க உள்ள தென் மண்டல செயற்குழு கூட்டம் குறித்தும் விவாதித்தனர்.
துணைப் பொதுச் செயலாளர் ஆற்றலரசு, மேலிட பொறுப்பாளர்கள் நாகரத்தினம், மனோகரன், மண்டலச் செயலாளர் தமிழ்வாணன்,மகளிரணி மாவட்டச் செயலாளர் பஞ்சவர்ணம், துணைச் செயலாளர் கலா, மாவட்ட செய்தி தொடர்பாளர்கள் பாரதி, அன்புவடிவேல் பேசினர். தேனி நகரச் செயலாளர் ஈஸ்வரன் நன்றி தெரிவித்தார்.