/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வீரபாண்டி சித்திரை திருவிழா: தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் பணி துவக்கம்

ADDED : ஏப் 28, 2024 05:22 AM

தேனி : வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவிற்காக தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் பணி துவங்கியது.
இக்கோயில் சித்திரை திருவிழாவிற்காக ஏப்.17ல் திருக்கம்பம் நடும் விழா நடந்தது.
பக்தர்கள் தினமும் திருகம்பத்திற்கு முல்லைப் பெரியாற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து அபிஷேகம் செய்து வருகின்றனர். சித்திரை திருவிழா மே 7 முதல் மே 14 வரை நடக்கிறது. பக்தர்களுக்கு தேவையான முன்னேற்பாடு பணிகள் கோயில் நிர்வாகம், பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நடந்து வருகிறது. திருவிழாவிற்காக பெரியகுளம், தேனி, ஆண்டிப்பட்டி, போடியில் இருந்து இயக்கப்படும் சிறப்பு பஸ்கள் நிற்பதற்கான தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் பணி நேற்று துவங்கியது.இந்த பஸ் ஸ்டாண்ட் வீரபாண்டி முத்துத்தேவன்பட்டி ரோட்டில் அமைகிறது. அதே போல் கம்பம், குமுளி, சின்னமனுார் பகுதிகளில் இருந்து வரும் பஸ்கள் நிற்பதற்கான தற்காலிக பஸ் ஸ்டாண்ட் வீரபாண்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு எதிர்புறம் உள்ள பகுதியில் அமைய உள்ளது.