/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சித்திரை திருவிழாவுக்கு தயாராகும் வீரபாண்டி நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள்
/
சித்திரை திருவிழாவுக்கு தயாராகும் வீரபாண்டி நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள்
சித்திரை திருவிழாவுக்கு தயாராகும் வீரபாண்டி நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள்
சித்திரை திருவிழாவுக்கு தயாராகும் வீரபாண்டி நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள்
ADDED : ஏப் 28, 2024 05:19 AM

தேனி : தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் வளாகம் பல்வேறு பொருட்கள் நிறைந்த கடைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மாவட்ட குலாளர் உறவின்முறை சங்கம் சார்பில், அம்மனுக்கு நேர்த்திக்கடனாக பக்தர்கள் வாங்கிச் செல்லும் அக்னிசட்டி, கொப்பரை சட்டிகள் தயாரித்து விற்பனைக்கு தயாராக உள்ளன.
இச்சட்டிகளை விற்பனை செய்யும் கடைகள், மக்களின் பொழுது போக்கு அம்சமான ராட்டினம் அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளதால் வீரபாண்டி பேரூராட்சி விழா கோலம் பூண்டுள்ளது.
வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் திருவிழா மே 7ல் துவங்கி 14ல் நிறைவு பெறுகிறது. திருக்கம்பம் ஏப்., 17ல் நடப்பட்டு, காப்பு கட்டும் நிகழ்வும், தினசரி திருக்கம்பத்திற்கு முல்லையாற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து அபிஷேகம் செய்வதும் தொடர்கிறது. மே 7க்கு பின் அக்னிசட்டி, கொப்பரை, ஆயிரம் கண் பானை உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை நிறைவேற்ற துவங்குவர்.
தயார் நிலையில் அக்னி, கொப்பரை சட்டிகள்
இந்நிலையில் வீரபாண்டி பேரூராட்சி அலுவலகத்திற்கு அருகே முல்லையாற்றின் கரையில் உள்ள மாவட்ட குலாளர் உறவின்முறை சங்க கட்டடத்தில் குலாளர் சமூகத்தினருக்கு உப்புச்சட்டி, தீர்த்த கலசம், அக்னிசட்டி, கொப்பரை, சிறிய பொம்மைகள் உள்ளிட்ட பொருட்கள் விற்பதற்கு ஒப்பந்த அடிப்படையில் 60க்கும் மேற்பட்ட கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இங்கு ஆயிரக்கணக்கான அக்னிசட்டி, கொப்பரை சட்டிகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன. மேலும் அக்னிசட்டி தயாரிப்பு பணிகளும் நடந்து வருகின்றன.
கொரோனாவிற்கு பின் அதிகரித்த விற்பனை
சங்கத்தின் நிர்வாகி ராமர் கூறுகையில், 'கடந்த 2 ஆண்டுகளுக்கு பின் திருவிழா நடப்பதே தெரியாமல் இருந்ததால், அக்னிசட்டி விற்பனை மந்தமாக இருந்தது. கடந்தாண்டு பக்தர்கள் வருகை அதிகரித்தது. ஆனால் எதிர்ப்பார்த்த அளவிற்கு விற்பனை இல்லை. தற்போது விற்பனை அதிகரிக்க துவங்கி உள்ளது. வெளியூர் காரர்களும் ஆர்டரின் பேரில் வாங்கிச் செல்கின்றனர்.
எங்களுக்கு 5 ஆயிரம் அக்னிசட்டிகள் விற்பனையாகும். மீதமுள்ளது சங்க உறுப்பினர்கள் மூலம் விற்பனை செய்வோம். அக்னிசட்டி ரூ.300க்கும், கொப்பரை ரூ.400க்கும் விற்பனை செய்து வருகிறோம்.
வேறு கலசங்கள் உள்ளிட்டவற்றை உறுப்பினர்கள் அவர்கள் தயாரித்து விற்பனை செய்கின்றனர், என்றார்.

