/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
/
வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
ADDED : ஏப் 24, 2024 12:21 AM

தேனி : சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் பக்தர்கள் திரளாக பங்கேற்று திருக்கம்பத்திற்கு தீர்த்தம் ஊற்றுதல், காப்பு கட்டுதலில் ஈடுபட்ட பக்தர்கள் குடும்பத்தினருடன் பங்கேற்று, அம்மன் தரிசனம் செய்து வருகின்றனர்.
இக்கோயில் சித்தரை திருவிழா மே 7 முதல் மே 14 வரை நடக்கிறது. இதற்காக ஏப்., 17 ல் கொடிக்கம்பம் நடும் விழா நடந்தது.
அதைத் தொடர்ந்து தினந்தோறும் பக்தர்கள் முல்லைப் பெரியாற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து கொடி கம்பத்திற்கு அபிஷேகம் செய்து வருகின்றனர். நேர்த்திக்கடன் நிறைவேற்றுவதற்காக அம்மன் தரிசனம் செய்து கைகளில் காப்பு கட்டி வருகின்றனர். நேற்று சித்ரா பவுர்ணமி, உள்ளூர் விடுமுறை என்பதால் பலரும் குடும்பத்துடன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.