/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வட்டவடையில் காய்கறி சாகுபடி மும்முரம்
/
வட்டவடையில் காய்கறி சாகுபடி மும்முரம்
ADDED : ஜூலை 07, 2024 02:41 AM

மூணாறு: வட்டவடை ஊராட்சியில் மழை கால காய்கறி சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மூணாறு அருகில் உள்ள வட்டவடை ஊராட்சி மிகவும் பின் தங்கிய பகுதியாகும். அங்கு முக்கிய தொழில் காய்கறி சாகுபடியாகும். கால நிலைக்கு ஏற்ப காரட், பீட்ரூட், உருளை கிழங்கு, பூண்டு, பீன்ஸ் வகைகள், முட்டை கோஸ் உள்பட பல்வேறு காய்கறிகள் இரண்டாயிரம் ஏக்கரில் சாகுபடி நடக்கிறது.
தென்மேற்கு பருவ மழை துவங்கி விட்டபோதும், அப்பகுதி தமிழக எல்லையை ஒட்டி உள்ளதால் செப்டம்பரில் மழை சற்று அதிகமாக பெய்வது வழக்கம்.
தற்போது அப்பகுதியில் உருளைகிழங்கு, கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், பூண்டு ஆகிய சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதிசயிப்பு: வட்டவடை சுற்றுலா பகுதியாக மாறி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அப்பகுதிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அடுக்கு, அடுக்காக காணப்படும் தோட்டங்களை பார்த்து அதிசயித்து வருவதுடன், அங்கு விளையும் காய்கறிகளை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.