/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வரத்து அதிகரித்ததால் விலை சரிந்த காய்கறிகள்
/
வரத்து அதிகரித்ததால் விலை சரிந்த காய்கறிகள்
ADDED : மார் 03, 2025 07:24 AM
தேனி : மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காய்கறிகள் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் நேற்று மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் தக்காளி ரூ.10, அவரை ரூ.20 என அனைத்து வகை காய்கறிகளும் விலை குறைந்து விற்பனையானது.
தேனி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் காய்கறிகள், பழங்கள், நெல் உள்ளிட்டவை சாகுடி செய்யப்படுகிறது. இங்கு விளைவிக்கப்படும் வேளாண் பொருட்கள் தமிழகம் மட்டும் இன்றி, கேரளா, வெளி நாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது. மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பெரிய அளவில் மழை, அதிக அளவில் வெயில் பதிவாகவில்லை.
இச்சூழல் வோளண்மைக்கு நன்கு உதவியது. இதனால் வழக்கத்தை விட அதிக அளவில் காய்கறிகள் சந்தைகள், மார்கெட்டுகளுக்கு விற்பனைக்கு வந்தன.
நேற்று (மார்ச் 2ல்) தேனி உழவர் சந்தையில் (கிலோ) தக்காளி, கத்தரி ரூ.10, புடலங்காய், பீட்ரூட், சவ்சவ் ரூ.15, முள்ளங்கி, முட்டைகோஸ் ரூ.16, பாகற்காய் ரூ.16 முதல் ரூ. 30, கொத்தரவரை, அவரை ரூ.20, பச்சை மிளகாய், நுால்கோல் ரூ. 25, பீர்க்கங்காய் ரூ.26, உருளைக்கிழங்கு ரூ.30, கேரட் ரூ.30 முதல் ரூ.55 வரை, பச்சைபட்டாணி, இஞ்சி ரூ. 48, வெங்காயம், பல்லாரி ரூ.40க்கு விற்பனையானது.