/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேசிய நெடுஞ்சாலையில் விபத்தை ஏற்படுத்தும் ரவுண்டானா
/
தேசிய நெடுஞ்சாலையில் விபத்தை ஏற்படுத்தும் ரவுண்டானா
தேசிய நெடுஞ்சாலையில் விபத்தை ஏற்படுத்தும் ரவுண்டானா
தேசிய நெடுஞ்சாலையில் விபத்தை ஏற்படுத்தும் ரவுண்டானா
ADDED : ஜூலை 18, 2024 05:13 AM

தேனி : கொச்சி -தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் போடி விலக்கில் பெரிய அளவில் ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் தொடர்கிறது. விபத்துக்களால் மரணங்கள் ஏற்படும் முன், இதனை சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
கொச்சி -தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை பழனிசெட்டிபட்டிக்கு அடுத்து போடி விலக்கு அமைந்துள்ளது. இந்த பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரவுண்டானா அமைக்கப்பட்டது. ஆனால் விபத்தை தடுக்க அமைக்கப்பட்ட ரவுண்டானா, விபத்தை ஏற்படுத்தும் வகையில் பெரியதாக அமைக்கப்பட்டு விட்டது. ரவுண்டானா பெரியதாக உள்ளதால் பஸ்கள் வளையும் பகுதியில் ரோடு மிகவும் குறுகலாக உள்ளது தேனியில் இருந்து போடி, போடியில் இருந்து தேனி செல்லும் பஸ்கள் இந்த ரவுண்டானாவில் வளையும் போது பஸ்சில் உள்ள பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்துகிறது.
அதே போல் முத்துத்தேவன்பட்டி வழியாக பஸ்கள் வந்தால் போடியில் இருந்து வரும் பஸ்சில் மோதுவது போல் உள்ளது.
அருகில் வந்த பிறகே வாகனங்கள் வருவது தெரிகிறது. விபத்துக்கள் ஏற்படும் முன் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் ரவுண்டானா அளவை குறைத்து, வளைவுகளில் ரோட்டினை அகலப்படுத்த வேண்டும். மேலும் வளைவுகளில் உள்ள செடிகள், புதர்களை சீரமைக்க வேண்டும்.