/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
லோக்சபா தேர்தலில் யாருக்கு ஓட்டு நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை
/
லோக்சபா தேர்தலில் யாருக்கு ஓட்டு நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை
லோக்சபா தேர்தலில் யாருக்கு ஓட்டு நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை
லோக்சபா தேர்தலில் யாருக்கு ஓட்டு நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை
ADDED : மார் 22, 2024 01:45 AM
பெரியகுளம்:லோக்சபா தேர்தலில் யாருக்கு ஓட்டளிப்பது என்பது குறித்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தேனி மாவட்ட நிர்வாகிகளை சந்தித்த போது ஆலோசித்துள்ளார்.
தமிழக வெற்றிக்கழகம் 2026 சட்டசபை தேர்தலில் களமிறங்க உள்ளது. சமீபத்தில் இக்கட்சிக்கு ஆன்லைனில் உறுப்பினர்கள் சேர்க்கையும் நடந்தது. தேனி மாவட்டத்தில் ஒன்றரை லட்சம் உறுப்பினர்கள் இணைந்துள்ளனர். இவர்களுக்கு கட்சி தலைவர் விஜய் கையெழுத்திட்ட உறுப்பினர்கள் கார்டு ஆன்லைனில் அனுப்பப்பட்டுள்ளது. அடுத்த மாதம் மதுரையில் மாநாடு நடத்த திட்டமிட்ட நிலையில் லோக்சபா தேர்தல் அறிவிப்பால் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் லோக்சபா தேர்தலில் யாருக்கு ஓட்டளிப்பது என்ற கேள்வி இக்கட்சியினரிடம் எழுந்துள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கும் 'தி கோட்' படப்பிடிப்பு கேரளாவில் நடக்கிறது. தேனி மாவட்டத்தை சேர்ந்த நகர, ஒன்றிய நிர்வாகிகள் தலா 2 பேர் வீதம் மாவட்ட தலைவர் முத்துப்பாண்டி தலைமையில் 200 பேர் வர விஜய் அழைப்பு விடுத்தார். இந்த சந்திப்புக்காக அவர்களுக்கு அடையாள அட்டையும் வழங்கப்பட்டது. அவர்கள் மட்டும் கேரளா சென்றனர். லோக்சபா தேர்தலில் யாருக்கு ஓட்டளிப்பது அல்லது நோட்டோவுக்கு ஓட்டளிப்பதா என அவர்களுடன் விஜய் ஆலோசனை நடத்தியுள்ளார். இதுகுறித்து கேட்ட போது அக்கட்சி நிர்வாகி ஒருவர் சஸ்பென்ஸ் என்றார். இன்றும் (மார்ச் 22) ஆலோசனை தொடரும் எனவும் தெரிவித்தார்.

