/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விஜயகாந்த் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
/
விஜயகாந்த் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
ADDED : ஆக 29, 2024 08:36 AM
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் தே.மு.தி.க., சார்பில் விஜயகாந்த் 72 வது பிறந்தநாள் விழா மற்றும் வறுமை ஒழிப்பு தின பொதுக்கூட்டம் வைகை அணை ரோட்டில் நடந்தது.
மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். ஆண்டிபட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் ரத்தினவேல் பாண்டியன், தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜா, மகளிர் அணி செயலாளர் சந்திரமதி முன்னிலை வகித்தனர். நகர் செயலாளர் பாலாஜி வரவேற்றார்.
திரைப்பட நடிகர் ராஜேந்திரநாத் தே.மு.தி.க., வின் வளர்ச்சி, விஜயகாந்தின் செயல்பாடுகள் குறித்து பேசினார். தே.மு.தி.க., சார்பில் 50க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு தையல் மிஷின், தேய்ப்பு பெட்டி, இலவச சேலைகள் வழங்கப்பட்டன. பேரூராட்சி 3வது வார்டு செயலாளர் கணேசன் நன்றி கூறினார்.

