/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் விகாசா மெட்ரிக் பள்ளி சாதனை
/
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் விகாசா மெட்ரிக் பள்ளி சாதனை
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் விகாசா மெட்ரிக் பள்ளி சாதனை
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் விகாசா மெட்ரிக் பள்ளி சாதனை
ADDED : மே 12, 2024 03:56 AM

உத்தமபாளையம்: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் உத்தமபாளையம் விகாசா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்தது.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் உத்தமபாளையம் விகாசா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி தஸ்மீன் 500 க்கு 496 மதிப்பெண் பெற்றுள்ளார்.
தேர்வு எழுதிய மாணவர்களில் 9 பேர் 490க்கு - மேல் மதிப்பெண் பெற்று சாதனை படைத்தனர். கணிதத்தில் 11 பேர், ஆங்கிலம், அறிவியலில் தலா 2 பேர், சமூக அறிவியலில் 3 பேர் என நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று சாதனை படைத்தனர்.
சாதனை மாணவ, மாணவிகளை பள்ளியின் தாளாளர் இந்திரா, செயலர் உதயகுமார், நிர்வாக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, முதல்வர்கள் குமரேசன், அவிலா தெரசா ஆகியோர் பாராட்டி பரிசுகள் வழங்கினார்கள்.