/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முல்லைப்பெரியாற்றில் கலக்கும் கழிவுநீர் -பாதிக்கும் கிராம மக்கள்
/
முல்லைப்பெரியாற்றில் கலக்கும் கழிவுநீர் -பாதிக்கும் கிராம மக்கள்
முல்லைப்பெரியாற்றில் கலக்கும் கழிவுநீர் -பாதிக்கும் கிராம மக்கள்
முல்லைப்பெரியாற்றில் கலக்கும் கழிவுநீர் -பாதிக்கும் கிராம மக்கள்
ADDED : மே 07, 2024 05:47 AM
கூடலுார்: கூடலுார் அருகே முல்லைப் பெரியாற்றில் கலக்கும் கழிவு நீரால் கிராம மக்கள் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
கூடலுார் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கருநாக்கமுத்தன்பட்டி அருகே முல்லைப் பெரியாற்றில்கலக்கிறது. ஆற்றிலிருந்து நேரடியாக பம்பிங் செய்து குடிநீர் சப்ளை செய்யும் குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, ஆங்கூர்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இதனை தடுப்பதற்காக கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கூடலுார் நகராட்சி சார்பில் சில மாதங்களுக்கு முன் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஆனால் கட்டுமானப் பணிகளுக்காக இடம் தேர்வு செய்வதில்குளறுபடி ஏற்பட்டு தாமதமதமானதால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி வீணானது. கூடலுார் நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தற்போது முல்லைப் பெரியாற்றில் குறைவாக செல்லும் தண்ணீரில் கழிவு நீர் கலப்பதால் கிராம மக்கள் பாதிப்பிற்கு உள்ளாகிவருகின்றனர்.