/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விநாயகர் சதுர்த்தி விழா கோலாகல கொண்டாட்டம் கோயில்களில் குவிந்த பக்தர்கள்
/
விநாயகர் சதுர்த்தி விழா கோலாகல கொண்டாட்டம் கோயில்களில் குவிந்த பக்தர்கள்
விநாயகர் சதுர்த்தி விழா கோலாகல கொண்டாட்டம் கோயில்களில் குவிந்த பக்தர்கள்
விநாயகர் சதுர்த்தி விழா கோலாகல கொண்டாட்டம் கோயில்களில் குவிந்த பக்தர்கள்
ADDED : செப் 08, 2024 05:01 AM

தேனி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள விநாயாகர் கோயில்களில் சிறப்பு வழிபாடு, அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தேனி பெத்தாட்சி விநாயகர் கோயிலில் சுவாமிக்கு 1008 லிட்டர் பால், மஞ்சள், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். என்.ஆர்.டி., நகர் சிவகணேச கந்த பெருமாள் கோயிலில் சித்தி விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.
தேனியில் பெரிகுளம் ரோட்டில் உள்ள வெற்றி கொம்பன் விநாயகர் கோவில், மதுரை ரோடு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், சிப்காட் வெற்றி விநாயகர் கோயில்களில் அதிக அளவில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கோயில் நிர்வாகங்கள் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
ஹிந்து முன்னணி சார்பில் பெரியகுளம் ரோடு ரயில்வே கேட் அருகில், ஹிந்து ஆட்டோ முன்னணி சார்பில் மதுரை ரோட்டில் பகவதி அம்மன் கோயில் தெரு பகுதியிலும், ஹிந்து எழுச்சி முன்னணி சார்பில் பெரியகுளம் ரோடு தேனி நகராட்சி அலுவலகம் அருகில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து பூஜைகள் நடந்தது. பல்வேறு ஹிந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடந்தது.
பெரியகுளம்:- வரசித்தி விநாயகர் கோயிலில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் பூஜை நடந்தது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம் செய்தார். ஜெயம் விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. குருவப்ப பிள்ளையார் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. பாலசாஸ்தா கோயில் கன்னிமூல கணபதிக்கு சிறப்பு பூஜை நடந்தது.
தெற்கு தெரு ராஜவிநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. சங்க விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. பாலசுப்பிரமணியர் கோயில் ஐஸ்வர்யம் விநாயகர், மாவட்ட அரசு மருத்துவமனை வளாகத்தில் நலம் விநாயகருக்கு சிறப்பு பூஜை நடந்தது.
வராகநதி விநாயகருக்கு சிறப்பு பூஜை நடந்தது. வடுகபட்டி முக்கரை விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது.
பஞ்சமுக விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. செல்வ விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. லட்சுமி விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது.
ஆண்டிபட்டி: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பால விநாயகர் கோயில், அரச மரத்து விநாயகர், சக்கம்பட்டி கல்கோயில் ராஜ விநாயகர், பகவதியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள காசி விநாயகர், தெற்குத்தெரு பஞ்சமுக விநாயகர், மேடை விநாயகர், மேலத்தெரு மேலவிநாயகர், மங்கள விநாயகர் கோயில்களில் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. விநாயகருக்கு பல்வேறு வகை அபிஷேகங்கள் அலங்காரம் செய்து கொழுக்கட்டை, சுண்டல், அவல், பொரிகடலை, பழம், தேங்காய் படையல் செய்து வழிபட்டனர். பல வீடுகளில் கொழுக்கொட்டை, அப்பம், இனிப்பு வகைகள் தயார் செய்து விநாயகருக்கு படையல் செய்து வழிபட்டனர்.
விநாயகருக்கு செல்பி பூத்
ஆண்டிபட்டி எம்.ஜி.ஆர்., சிலை அருகே ஹந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலை அருகே யாகசாலை அமைத்து பூஜைகள் செய்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் கார்த்திக், நகர் செயலாளர் ராஜ்குமார், வர்த்தக பிரமுகர் ராமச்சந்திரன், பா.ஜ., சார்பில் வழக்கறிஞர் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.ஆண்டிபட்டி சீனிவாசா நகரில் தன்னார்வலர் மனோஜ்குமார் தலைமையில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் விநாயகர் சிலை முன்பு 360° யில் சுழலும் செல்ஃபி பூத் அமைத்து குழந்தைகளை அதில் நிறுத்தி விநாயகர் சிலை முன்பு குழந்தைகளுடன் விநாயகரை படம் எடுத்து மகிழ்ந்தனர். விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
மூணாறு:- சுப்பிரமணிய சுவாமி, சக்தி விநாயகர் ஆகிய கோயில்களில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடந்தன. காளியம்மன், நவகிரக கிருஷ்ணர் கோயிலில் அதிகாலை 5:30 மணிக்கு அஷ்டதிரவிய மகா கணபதி ஹோமமும் அதன்பிறகு சிறப்பு பூஜைகளும் நடந்தன. நகரில் மகாத்மா காந்தி சிலை, டாக்சி ஸ்டாண்ட், மாட்டுபட்டி ரோடு உள்பட பல பகுதிகளில் கார், ஆட்டோ, ஜீப் ஆகிய டிரைவர்கள் சார்பில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. அவற்றை பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் வழிபட்டனர்.
மூணாறை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் செப். 15ல் மூணாறில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு ஆற்றில் கரைக்கப் படும். அதுவரை தினமும் சிறப்பு பூஜைகள் நடக்கும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.