sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மரக்கன்றுகள் வளர்க்க விழிப்பணர்வு ஏற்படுத்தும் தன்னார்வ இயக்கம்

/

மரக்கன்றுகள் வளர்க்க விழிப்பணர்வு ஏற்படுத்தும் தன்னார்வ இயக்கம்

மரக்கன்றுகள் வளர்க்க விழிப்பணர்வு ஏற்படுத்தும் தன்னார்வ இயக்கம்

மரக்கன்றுகள் வளர்க்க விழிப்பணர்வு ஏற்படுத்தும் தன்னார்வ இயக்கம்


ADDED : ஆக 19, 2024 01:04 AM

Google News

ADDED : ஆக 19, 2024 01:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரங்கள் தேவையற்ற மாசுக்களை உள் வாங்கிக் கொண்டு சுத்தமான ஆக்சிஜனை தொடர்ந்து நமக்கு கிடைக்கச் செய்கின்றன. வெப்பமயமாதல் தடுக்கப்பட்டு, மழை பெய்வதற்கான சூழலை ஏற்படுத்தினாலே போடி போடி நகரில் மாசு ஏற்படுவதை தடுக்கலாம். மேலும் போடியில் இயங்கிவரும் தி கிரீன் லைப் பவுண்டேசன் அமைப்பு பாரதிநகர், போடி மீனாட்சிபுரம் விலக்கு முதல் போடிமெட்டு வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட விதைகளை துாவி, மரங்களாக வளர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

ரீங்காரமிடும் கம்மிங் பேர்ட்ஸ்-


எம்.ஏ.சேகர், தி கிரீன் லைப் பவுண்டேசன் உறுப்பினர், போடி : நாம் வாழும் பகுதியை துாய்மையாகவும், வீடுகள் தோட்டங்களில் மரங்கன்றுகள் வளர்ப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும். வீட்டைச் சுற்றி இடம் இல்லாத போது மாடித்தோட்டம் அமைத்து மருத்துவ குணம் வாய்ந்த இயற்கை மூலிகைகள், காய்கறி செடிகள் வளர்ப்பதால் சுத்தமான காற்றுடன் ஆக்சிஜனும் கிடைக்கும்.போடி பாரதி நகரில் உள்ள எங்கள் வீட்டில் வரவேற்பாளர்களே பசுமையுடன் காணப்படும் மரங்கள் தான். இயற்கைக்கு ஈடு இணை எதுவும் கிடையாது.

எனக்கு இயற்கை மீது ஆர்வம் இருப்பதால் வீட்டின் பின்புறம் உள்ள இடத்தில் பசுமை தரும் வேம்பு, குளிர்ச்சி தரும் புங்கை, தேக்கு, முருங்கை மரங்கள், பழ வகையான கொய்யா, மாதுளை, சப்போட்டா, எலுமிச்சை, சீத்தா, பப்பாளி பழம், மூலிகைச் செடியான சோற்று கற்றாழை, சீர் பச்சிலை, துளசிச் செடிகள் உள்ளிட்ட மரங்களை 25 ஆண்டுகளுக்கு மேலாக வளர்த்து வருகிறேன்.

தினமும் காலை, மாலை நேரங்களில் தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகிறேன். பூக்களில் உள்ள தேனை குடிப்பதற்காக குயில், கம்மிங் பேர்ட் உள்ளிட்ட பறவைகள் வந்து செல்கின்றன. தி கிரீன் லைப் பவுண்டேஷன் ஒத்துழைப்புடன் வனம் வளரவும், பூமி செழிக்க மழை விழ வேண்டும் என்பதற்காக நாவல், பனை, சப்போட்டா உள்ளிட்ட பழ விதைகளை போடி மீனாட்சிபுரம் விலக்கு முதல் போடிமெட்டு வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட விதைகளை துாவி உள்ளேன். விதைகள் விருட்சமாகி மரங்களாகவும் வளர்ந்து உள்ளன. பூமியை நஞ்சாக்கும் பாலிதீன் பயன்பாட்டை குறைக்க என்னாலான முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறேன்., என்றார்.

பசுமையாளர் விருது அவசியம்


எஸ்.செந்தில்குமார், இயற்கை ஆர்வலர், போடி : மரங்களை வெட்ட வெட்ட சீதோஷ்ன நிலைகளும், காலம் மாற்றங்களும் மாறிக் கொண்டே வருகிறது. வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உடல் உஷ்ணத்தை அதிகரிக்கிறது. கண், உடல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.இயற்கை மாசுபடுவதற்கு முக்கிய காரணமாக விளங்கும் சாயக்கழிவுகள், காலாவதி யான வாகனங்கள் வெளியிடும் புகையினால் மாசு ஏற்படுகிறது. இவ்வாறான வாகனங் களை தடை செய்ய வேண்டும்.

ஒரு மரத்தை வெட்டினால் 10 மரங்கன்று கள் நடந்து தொடர்ந்து ஓராண்டுள் நட வேண்டும். அனுமதி இன்றி மரங்கள் வெட்டுபவர்கள் மீது நட zவடிக்கை எடுக்க வேண்டும். நமக்கு உயிர் தரக்கூடிய மரங்களுக்கு வாழ்நாள் முழுவதும் நன்றி செலுத்தும் வகை யில் தெருக்கள் தோறும் ரோட்டின் இருபுறமும் மரக்கன்றுகள் நட்டு அவற்றை பாதுகாக்க வேண்டும். ஓராண்டில் அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகள் நடுவோர் 5 ஆண்டுகளில் அதனை பராமரித்து மரங்களாக வளர்க்கும் நபர்களை பாராட்டி 'பசுமையாளர்' சாதனை விருது வழங்க வேண்டும்., என்றார்.






      Dinamalar
      Follow us