/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தொடர்ந்து சலுகைகள் பெற தி.மு.க.,விற்கு ஓட்டளியுங்கள்: தங்க தமிழ்செல்வன் பிரசாரம்

ADDED : மார் 29, 2024 06:04 AM

தேவதானப்பட்டி : மகளிர் உரிமைத் தொகை தொடர்ந்து கிடைத்திட தி.மு.க.,விற்கு ஓட்டளியுங்கள் என தி.மு.க., வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் பேசினார்.
பெரியகுளம் ஒன்றிய பகுதிகளில் தி.மு.க., வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் பிரசாரம் மேற்கொண்டார். முன்னதாக தேவதானப்பட்டி காமாட்சியம்மன் கோயில், ஜி.கல்லுப்பட்டி பட்டாளம்மன் கோயிலில் சுவாமி கும்பிட்டு பிரசாரத்தை துவங்கினார். அவர் பேசியதாவது: தி.மு.க., ஆட்சியில் 3 ஆண்டுகளில் தேர்தல் வாக்குறுதியை முடிந்தளவுக்கு நிறைவேற்றி உள்ளோம். முதல்வர் ஸ்டாலின் தாயுள்ளத்தோடு ஒன்னேகால் கோடி பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கியுள்ளார். தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்றால் உதயசூரியனுக்கு ஓட்டளியுங்கள்.
மாற்றி போட்டால் கிடைப்பது கிடைக்காமல் போய்விடும். மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதவர்களுக்கு தேர்தலுக்கு பின் நானே வாங்கி தருகிறேன். நாங்கள் வெற்றி பெற்றால் சிலிண்டர் விலை ரூ.500 க்கும், பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு ரூ.40 குறையும், டோல்கேட் கட்டணம் ரத்து செய்யப்படும் என்றார்.
கெங்குவார்பட்டி, தேவதானப்பட்டி, சில்வார்பட்டி, எருமலைநாயகன்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, சிந்துவம்பட்டி, குள்ளபுரம், கோவில்புரம் பகுதிகளில் ஓட்டு சேகரித்தார்.
மாநில உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் மூக்கையா, சரவணகுமார் எம்.எல்.ஏ., வடக்கு ஒன்றிய செயலாளர் பாண்டியன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.