/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வீட்டில் இருந்தபடி ஓட்டு: முதல் கட்டமாக 6742 ஓட்டுகள் பதிவு
/
வீட்டில் இருந்தபடி ஓட்டு: முதல் கட்டமாக 6742 ஓட்டுகள் பதிவு
வீட்டில் இருந்தபடி ஓட்டு: முதல் கட்டமாக 6742 ஓட்டுகள் பதிவு
வீட்டில் இருந்தபடி ஓட்டு: முதல் கட்டமாக 6742 ஓட்டுகள் பதிவு
ADDED : ஏப் 22, 2024 05:58 AM
மூணாறு, : இடுக்கி லோக்சபா தொகுதியில் முதல் கட்டமாக வீட்டில் இருந்தபடி 6742 வாக்காளர்கள் தங்களது ஓட்டுக்களை பதிவு செய்தனர்.
தற்போது நடக்கும் லோக்சபா தேர்தலில் மாற்றுத் திறனாளிகள், 85 வயதை கடந்த முதியவர்கள் ஆகியோர் வீட்டில் இருந்தபடி ஓட்டளிப்பதற்கு தேர்தல் கமிஷன் வாய்ப்பளித்துள்ளது. அதன்படி இடுக்கி லோக்சபா தொகுதியில் 85 வயதை கடந்தவர்கள் 12,797 பேர், மாற்றுத் திறனாளிகள் 10,041 பேர் என 22,838 வாக்காளர்களில் வீட்டில் இருந்தபடி ஓட்டளிக்க 7852 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
அவர்களிடம் முதல்கட்டமாக ஓட்டுப்பதிவு செய்யும் பணி ஏப்.15 முதல் ஏப்.19 வரை நடந்தது. அதில் 6742 வாக்காளர்கள் வீட்டில் இருந்தபடியே தங்களது ஓட்டுக்களை பதிவு செய்து, ஜனநாயக கடமையை நிறைவு செய்தனர். ஓட்டளிக்க விண்ணப்பித்து விட்டு ஓட்டளிக்க தவறியவர்கள் ஏப்.26ல் நடக்கும் தேர்தலின் போது ஓட்டளிக்க இயலாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.