/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஓட்டு கேட்கும் உள்ளூர் பிரமுகர்களை புன் சிரிப்பில் வரவேற்கும் வாக்காளர்கள்

ADDED : ஏப் 08, 2024 04:37 AM
ஆண்டிபட்டி : தேனி லோக்சபா தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க., அ.ம.மு.க., வேட்பாளர்களிடையே மும்முனை போட்டி விறுவிறுப்படைந்துள்ளது.
ஒவ்வொரு கட்சியிலும் வேட்பாளர்கள் முதல் சுற்று பிரசாரத்தை பல இடங்களில் முடித்துள்ளனர். அந்தந்த அரசியல் கட்சிகள் சார்பில் வரும் வி.ஐ.பி.,க்கள், 'ஸ்டார்' பேச்சாளர் பிரச்சாரங்களிலும் பணம் கொடுத்து வரவேற்புக்காக வழக்கமாக வரும் பொதுமக்களை திரட்டி கூட்டத்தை காண்பிக்கின்றனர். இந்நிலையில் தி.மு.க., அ.தி.மு.க., அ.ம.மு.க., மற்றும் அதன் கூட்டணியில் உள்ள கட்சிகளை சேர்ந்த உள்ளூர் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் அந்தந்த பகுதியில் வீடு வீடாக சென்று ஓட்டுக்களை 'கேன்வாஸ்' செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்சியினர் ஓட்டு சேகரிப்பில் மேற்கொள்ளும் சில உத்திகளை அடுத்தடுத்து வருபவர்களும் தொடர்கின்றனர். ஒரே நாளில் ஒரு சில மணி நேரங்களில் அடுத்தடுத்த கட்சிகளை சேர்ந்தவர்கள் தங்கள் வேட்பாளருக்கு ஆதரவாக ஓட்டுக் கேட்டு செல்கின்றனர். பொதுமக்களும் தங்களை தேடி வரும் அனைவருக்கும் புன்சிரிப்புடன் ஓகே சொல்லி அனுப்புகின்றனர்.