/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இடுக்கியில் ஓட்டுப்பதிவு இயந்திரம் ரெடி
/
இடுக்கியில் ஓட்டுப்பதிவு இயந்திரம் ரெடி
ADDED : ஏப் 19, 2024 05:57 AM

மூணாறு: கேரளாவில் லோக்சபா தேர்தல் ஏப்.26 ல் நடக்கிறது. அதனையொட்டி இடுக்கி லோக்சபா தொகுதியில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தயார்படுத்தும் பணிகள் நேற்று நிறைவடைந்தது.
இத்தொகுதியில் இடுக்கி மாவட்டத்தில் தேவிகுளம், உடும்பன்சோலை, பீர்மேடு, இடுக்கி, தொடுபுழா, எர்ணாகுளம் மாவட்டத்தில் கோதமங்கலம், மூவாற்றுபுழா ஆகிய ஏழு சட்டசபை தொகுதிகள் உள்ளன.
தேவிகுளம் 195, உடும்பன்சோலை 193, பீர்மேடு 203, இடுக்கி 196, தொடுபுழா 216, கோதமங்கலம் 159, மூவாற்றுபுழா 153 என 1315 ஓட்டுச் சாவடிகள் உள்ளன. அவற்றிற்கு தேவையான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சட்டசபை தொகுதி வாரியாக பாதுகாக்கப்பட்ட அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை தயார் படுத்தும் பணி நேற்று நிறைவு பெற்றது. அப்போது தேர்தல் நடத்தும் உதவி அதிகாரிகள் உள்பட பலர் உடனிருந்தனர். தொடுபுழா சட்டசபை தொகுதியில் தனியார் கல்லூரியில் நடந்த மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் தயார் படுத்தும் பணியை கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான ஷீபாஜார்ஜ் ஆய்வு செய்தார்.

