/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இடுக்கியில் இன்று ஓட்டு பதிவு; அனைத்து ஏற்பாடுகளும் தயார்
/
இடுக்கியில் இன்று ஓட்டு பதிவு; அனைத்து ஏற்பாடுகளும் தயார்
இடுக்கியில் இன்று ஓட்டு பதிவு; அனைத்து ஏற்பாடுகளும் தயார்
இடுக்கியில் இன்று ஓட்டு பதிவு; அனைத்து ஏற்பாடுகளும் தயார்
ADDED : ஏப் 26, 2024 01:08 AM
மூணாறு : இடுக்கி லோக்சபா தொகுதியில் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகார ஷீபாஜார்ஜ் தெரிவித்தார்.
கேரளாவில் 20 லோக்சபா தொகுதிக்கு இன்று (ஏப்.26) ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. காலை 7:00 முதல் மாலை 6:00 மணி வரை ஓட்டு பதிவு நடக்கிறது.
இடுக்கி லோக்சபா தொகுதியில் 12,51,189 வாக்காளர்கள் உள்ளனர். 1003 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 56 ஓட்டுச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 752 ஓட்டுச்சாவடிகளில் 'வெப்காஸ்டிங்' வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன. 7717 போலீசார், மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் 25 பேர் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். சட்டசபை தொகுதிகளில் பாதுகாக்கப்பட்ட ஓட்டு பதிவு இயந்திரம் உள்பட ஓட்டு பதிவுக்கு தேவையான பொருட்கள் நேற்று வினியோகிக்கப்பட்டன.
கட்டுப்பாட்டு அறை: தேர்தலை சுமூகமாக நடத்துவதற்கு வசதியாக வாக்காளர்கள், ஓட்டு பதிவு அதிகாரிகள் ஆகியோர் புகார் தெரிவிக்கும் வகையில் கலெக்டர் அலுவலகம், சட்டசபை தொகுதிகள் ஆகியவற்றில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் ஏப்.27 காலை 6:00 வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து கலெக்டர் உத்தரவிட்டார்.
அகற்றம்: தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக புகார் அளிப்பதற்கு ' சி- விஜில்' எனும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.
அதன் மூலம் மார்ச் 16 முதல் நேற்று (ஏப்.25) வரை 7222 புகார்கள் தெரிவிக்கப்பட்டன. அதன்படி விதிமுறைகள் மீறி ஒட்டிய 18,958 போஸ்டர்கள், 3218 பேனர்கள், 3406 கொடிகள் ஆகியவை அகற்றப்பட்டன.
மாநிலத்தில் அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் உள்பட அனைத்து நிறுவனங்களுக்கும் இன்று பொது விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டது.

