ADDED : மே 31, 2024 06:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்: லோயர்கேம்ப் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் கம்பத்திற்கு செல்லும் குடிநீர் குழாய் கூடலுார் எம்.ஜி.ஆர்., காலனி அருகே மூன்று மாதங்களுக்கு முன் உடைப்பு ஏற்பட்டது. மாநில நெடுஞ்சாலையில் குடிநீர் வீணாக வெளியேறுகிறது. குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் இதுவரை கண்டு கொள்ளவில்லை.
பல்வேறு பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் மூன்று மாதங்களாக வீணாக செல்லும் குடிநீர் குழாயை சீரமைக்க முன்வர வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.