/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேர்தல் நடத்தை விதிகளால் தண்ணீர் பந்தல்கள் 'ஆப்சென்ட்'
/
தேர்தல் நடத்தை விதிகளால் தண்ணீர் பந்தல்கள் 'ஆப்சென்ட்'
தேர்தல் நடத்தை விதிகளால் தண்ணீர் பந்தல்கள் 'ஆப்சென்ட்'
தேர்தல் நடத்தை விதிகளால் தண்ணீர் பந்தல்கள் 'ஆப்சென்ட்'
ADDED : ஏப் 09, 2024 12:25 AM
தேனி : தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால், அரசியில் கட்சியினரின் தண்ணீர் பந்தல்கள் அமைக்க இயலாமல் உள்ளனர்.
தமிழகத்தில் கோடை துவங்கியதும் அனைத்து அரசியல் கட்சியினரும் தங்கள் கட்சி சார்பில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தண்ணீர், நீர்மோர் பந்தல்கள் அமைத்து பொதுமக்களுக்கு வழங்குவர். பல இடங்களில் துவக்க நாளில் பழங்கள், இளநீர் என வழங்குவதால்மக்கள் கூட்டம் களைகட்டும்.
மற்ற நாட்களில் பொதுமக்களின் தாகத்தை தீர்க்க குடிநீர் வழங்குவர். சில கட்சியினர் நீர் மோர் வழங்குவர்.
தற்போது தேர்தலை முன்னிட்டு விதிமுறைகள் அமலில் உள்ளதால், அரசியல் கட்சியினர் தண்ணீர் பந்தல்கள் அமைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. அரசு சார்பில் பொது இடங்களில் தண்ணீர் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.