/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வைகை அணையில் திறக்கப்பட்ட நீர் குறைப்பு
/
வைகை அணையில் திறக்கப்பட்ட நீர் குறைப்பு
ADDED : மே 14, 2024 09:03 AM
ஆண்டிபட்டி, : வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீரின் அளவு நேற்று வினாடிக்கு 1500 கன அடியாக குறைக்கப்பட்டது.
மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பாசனத்திற்காக மே 11 முதல் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வைகை பூர்வீக பாசனப்பகுதி 3ல் உள்ள கண்மாய்களில் நீர் தேங்கும் விதமாக 5 நாட்களில் 915 மில்லியன் கனஅடி நீர் திறக்கப்பட உள்ளது. மே 11 ல் வினாடிக்கு 3000 கன அடியாக திறக்கப்பட்ட நீர் நேற்று முன்தினம் வினாடிக்கு 2000 கனஅடியாகவும், நேற்று காலை 10:15 மணிக்கு வினாடிக்கு 1500 கன அடியாகவும் குறைக்கப்பட்டது.
5ம் நாளான இன்று அணையில் வெளியேறும் நீரின் அளவு வினாடிக்கு 1090 கன அடியாக குறைக்கப்பட்டு நிர்ணயித்த அளவு வெளியேறியபின் பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீர் நிறுத்தப்படும் என்று வைகை அணை நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

