sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

வடுகபட்டியில் குடிநீர் தட்டுப்பாடு

/

வடுகபட்டியில் குடிநீர் தட்டுப்பாடு

வடுகபட்டியில் குடிநீர் தட்டுப்பாடு

வடுகபட்டியில் குடிநீர் தட்டுப்பாடு


ADDED : ஜூலை 21, 2024 08:05 AM

Google News

ADDED : ஜூலை 21, 2024 08:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம்: வடுகபட்டி பேரூராட்சிக்கு வைகை அணை கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து குடிநீர் வினியோகம் செய்யாததால் 6 நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

பெரியகுளம் அருகே வடுகபட்டி பேரூராட்சியில் 15 வார்டுகளில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். தாமரைக்குளம் கண்மாயில் போர்வெல் அமைத்தும், சோத்துப்பாறை கூட்டு குடிநீர் திட்டம், வைகை அணை கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து 3 மேல்நிலைத் தொட்டியிலிருந்து தினமும் 13 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

இதில் அதிகபட்சமாக வைகை அணை கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து தினமும் 8 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

9 நாட்களாக வைகை அணை கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து குடிநீர் சப்ளை செய்யவில்லை. இதனால் வடுகபட்டியில் 6 நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

பேரூராட்சி தலைவர் நடேசன் கூறுகையில்,' கூட்டு குடிநீர் திட்டம் செயற்பொறியாளர் ராமச்சந்திரனிடம் பிரச்ைன குறித்துஇரு முறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது' என்றார்.






      Dinamalar
      Follow us