/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இருபோக நிலங்களின் முதல் போகத்திற்கான தண்ணீர் நிறுத்தம் ஒரு போக நிலங்களுக்கு இன்று திறப்பு

ADDED : செப் 14, 2024 11:06 PM
ஆண்டிபட்டி:பெரியாறு பிரதான கால்வாய் பாசனப் பகுதியின் கீழ் உள்ள இருபோக பாசன நிலங்களின் முதல் போகத்திற்கு வைகை அணையில் திறக்கப்பட்ட நீர் நேற்று (செப்.15) நிறுத்தப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் ஆயிரத்து 797 ஏக்கர், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகாவில் 16 ஆயிரத்து 452 ஏக்கர், மதுரை வடக்கு தாலுகாவில் 26 ஆயிரத்து 792 ஏக்கர் என மொத்தம் 45 ஆயிரத்து 41 ஏக்கர் நிலங்கள், பெரியாறு பிரதான கால்வாய் பாசனப்பகுதியின் கீழ் இருபோக பாசன நிலங்களாக உள்ளன.
இந்த நிலங்களுக்கு முதல்போக பாசனத்திற்காக ஜூலை 3ல் வைகை அணையில் இருந்து வினாடிக்கு 900 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. 45 நாட்களுக்கு முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறை வைத்தும் மொத்தம் 120 நாட்களுக்கு நீர் திறக்கும் நடவடிக்கை தொடர்கிறது. முறைப்பாசன அடிப்படையில் நேற்று காலை 6:00 மணிக்கு வைகை அணையில் திறக்கப்பட்ட நீர் நிறுத்தப்பட்டது.
நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது: பெரியாறு பாசனப் பகுதியில் உள்ள ஒருபோக பாசன நிலங்கள் 85 ஆயிரத்து 563 ஏக்கர், திருமங்கலம் பிரதான கால்வாய் பகுதியில் 19 ஆயிரத்து 439 ஏக்கர் என மொத்தம் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 2 ஏக்கர் நிலங்களுக்கு வைகை அணையில் இருந்து வினாடிக்கு 1130 கனஅடி வீதம் இன்று(செப்.16) முதல் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இது 45 நாட்களுக்கு முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறை வைத்தும் என மொத்தம் 120 நாட்களுக்கு 8461 மில்லியன் கன அடி நீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.