/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மதுரை பாசனத்திற்காக திறக்கப்பட்ட நீர் நிறுத்தம்
/
மதுரை பாசனத்திற்காக திறக்கப்பட்ட நீர் நிறுத்தம்
ADDED : மே 28, 2024 09:14 PM
ஆண்டிபட்டி:வைகை அணையில் இருந்து மதுரை மாவட்ட பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீர் நேற்று நிறுத்தப்பட்டது.
வைகை பூர்வீக பாசனப்பகுதி 1ல் உள்ள மதுரை மாவட்ட கண்மாய்களில் தேங்கும் விதமாக வைகை அணையில் இருந்து வினாடிக்கு 400 கன அடி வீதம் மே 21ல் தண்ணீர் திறந்து விடப்பட்டது. கடந்த 8 நாட்களில் அணையில் இருந்து 209 மில்லியன் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.
ஏற்கனவே மே 10 முதல் 14 வரை வைகை பூர்வீக பாசனப்பகுதி 3ல் உள்ள ராமநாதபுரம் மாவட்ட கண்மாய்களுக்கு 915 மில்லியன் கனஅடியும், வைகை பூர்வீக பாசனப்பகுதி 2ல் உள்ள சிவகங்கை கண்மாய்களுக்கு மே 16 முதல் 19 வரை 376 மில்லியன் கனடியும் திறந்து விடப்பட்டது. அணையில் இருந்து பாசனத்திற்கு தொடர்ந்து நீர் வெளியேறியதால் மே 10ல் 56.66 அடியாக இருந்த நீர்மட்டம் படிப்படியாக குறைந்து நேற்று 47.57 அடியாக இருந்தது. அணையின் மொத்த உயரம் 71 அடி.
கடந்த 17 நாட்களில் அணை நீர்மட்டம் 9 அடி குறைந்துள்ளது. நேற்று அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 202 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து மதுரை, தேனி, ஆண்டிபட்டி - சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 72 கனஅடி வீதம் வழக்கம்போல் வெளியேறுகிறது.