/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
75 சதவீதம் என்ன ஆச்சு பிரதான கட்சியில் விசாரணை ஆரம்பம்
/
75 சதவீதம் என்ன ஆச்சு பிரதான கட்சியில் விசாரணை ஆரம்பம்
75 சதவீதம் என்ன ஆச்சு பிரதான கட்சியில் விசாரணை ஆரம்பம்
75 சதவீதம் என்ன ஆச்சு பிரதான கட்சியில் விசாரணை ஆரம்பம்
ADDED : ஏப் 22, 2024 05:51 AM
சின்னமனுார் : 75 சதவீத பட்டுவாடாவிற்கு ஓட்டுச் சாவடி வாரியாக பக்கா பேக்கிங்கில் வந்ததில், 10 முதல் 20 சதவீதம் வரை கபளீகரம் செய்யப்பட்டது தொடர்பான விசாரணை துவங்கியுள்ளது.
தமிழகம் முழுவதும் 39 லோக்சபா தொகுதிகளில் ஏப்.19 ல் தேர்தல் முடிந்தது. தேர்தலில் போட்டியிட்ட அரசியல் கட்சிகள் போட்டா போட்டிகள் போட்டுக் கொண்டு கவனிக்கும் என்று எதிர்பார்த்து வாக்காளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த மூன்றெழுத்து இனிசியல் கொண்டவரும், இலைக் கட்சியும் கையை விரித்து விட்டன.
ஆளும் தரப்பில் மட்டும் மூன்று இலக்கத்தில் கவனிப்பு நடந்தது. கட்சியின் தலைமையில் இருந்து, ஓட்டுச்சாவடி வாரியாக 75 சதவீதம் பேர்களுக்கு கவனிக்க பக்காவாக 'பேக்கிங்' செய்து டெலிவரி ஆனது. ஆனால் பெரும்பாலான இடங்களில் 75 சதவீதத்திற்கு கவனிப்பு நடைபெறவில்லை. 10 முதல் 20 சதவீதம் வரை உள்ளடி வேலைகள் நடந்தது. குறிப்பிட்ட இலக்கை அடைய முடியுமா என்ற சந்தேகம் ஆளும் தரப்பிற்கு வந்துள்ளது.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில் பட்டுவாடாவில் உள்ளடி வேலைகள் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து கட்சியின் தலைமை, ஊர் வாரியாக விசாரணையை துவக்கி உள்ளது. பேக்கிங்கில் கை வைத்தவர்களை கல்தா கொடுக்கவும் கட்சி தலைமை தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கிடையே விசில் வரும் சின்னத்தை கொண்டவரும் பட்டுவாடா செய்யாததற்கு வருந்துகிறாராம். சூழ்நிலை சாதகமாக இருந்தும், கை நழுவ விட்டு விட்டோமா என கட்சியின் உயர் மட்ட நிர்வாகிகளிடம் புலம்புகிறாராம்.

