/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சேதமடைந்த வீதிகளை சீரமைப்பது எப்போது
/
சேதமடைந்த வீதிகளை சீரமைப்பது எப்போது
ADDED : மே 06, 2024 12:40 AM
சின்னமனுார்: சின்னமனுாரில் சேதமடைந்த தெரு வீதிகளை சீரமைப்பது எப்போது என, பொது மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. மின் நகர், சிவசக்தி நகர், எழில் நகர் உள்ளிட்ட விரிவாக்கப் பகுதிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அம்ரூத் திட்டத்தின் கீழ் குடிநீர் ஆதாரங்களை மேம்படுத்த நிதி அனுமதிக்கப்பட்டது.
நகரின் பெரும்பாலான வீதிகளில் பதிக்கப்பட்டிருந்த பகிர்மான குழாய்கள் தோண்டி எடுத்து, புதிய பைப் லைன் அமைத்தனர். இதனால் வீதிகள் சேதமடைந்தது. நடக்கக்கூட முடியாத நிலை ஏற்பட்டது.
குறிப்பாக 4 வது வார்டு பட்டாளம்மன் கோயில் இரண்டாவது வீதியில் நடக்க முடியாத நிலை உள்ளது.
இதனால் தினமும் வந்து குப்பை சேகரிக்கும் துப்புரவு பணியாளர்கள் தற்போது வருவதே இல்லை. இதனால் இந்த வீதிகளில் குடியிருக்கும் குடும்பத்தினர் குப்பை கொட்ட முடியாமல் அவதிபட்டு வருவதுடன், சுகாதார சீர்கேட்டில் தவிக்கின்றனர்.