ADDED : மே 23, 2024 03:53 AM

தேனி: மாவட்டத்தில் பல இடங்களில் பலவலாக மழை பெய்தது. இதில் சின்னமனுாரில் 2 மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டியது.
மாவட்டத்தில் நேற்று முன்தினம் மஞ்சளாறில் அதிகளவு ஆக 17.0 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. மிக குறைவாக தேக்கடியில் 1.2 மி.மீ., மழை பாதிவாகியுள்ளது.
அரண்மனைப்புதுார் 1.8., சோத்துப்பாறை 2.0., வீரபாண்டியில் 5.0., முல்லைப் பெரியாறு அணையில் 13.6, ஆண்டிபட்டி, பெரியகுளம், வைகை அணை, உத்தமபாளையம், கூடலுார், சண்முகநாதி அணை பகுதிகளில் மிதமான காற்றுடன் கருமேகம் சூழ்ந்த நிலையிலும் மழை பெய்ய வில்லை.
நேற்று கொட்ட தீர்த்தமழை
சின்னமனுாரில் மதியம் 2:00 மணி நேரம் மழை கொட்டித்தீர்த்தது. அதேபோல் ஆண்டிபட்டி, பெரியகுளம் பகுதியில் கனமழை கொட்டியது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அனுமந்தம்பட்டி, கம்பம் புதுப்பட்டி, கம்பம் பகுதியில் காலையில் வெளியிலும், மாலையில் மழை விட்டு விட்டு தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது. இதனால் மககள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சேதமடைந்த 2 வீடுகள்
மாவட்டத்தில் மே 19ல் பெய்த கன மழைக்கு குச்சனுார் முத்துப்பிள்ளைத் தெரு மாணிக்கத்தம்மாளின் தகர வீடு, மே 20ல் பெய்த மழையில் ராயப்பன்பட்டி முல்லைதெரு சதீஸ்ராஜ்குமார் தகரவீடுகள் சேதமடைந்தன.
இருவிபத்துகளில் உயிர், பொருட்கள் சேதம் ஏற்படவில்லை என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

