ADDED : ஜூலை 23, 2024 06:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னமனூர்: சின்னமனூர் அருகே சீலையம்பட்டி மெயின் ரோட்டின் மேற்கு பக்கம் இதே ஊரை சேர்ந்த ராஜேந்திரன் 53, இவரது மனைவி செல்வராணி 51, நின்று கொண்டிருந்தனர்.
மத்திய பிரதேசம், ஜபல்பூரை சேர்ந்த கிறிஸ்டியா மேரி 20, அவரது கணவர் டோமினிக் தனது காரில் கேரளா நோக்கி சென்ற போது, எதிர்பாராதவிதமாக கார் செல்வராணி மீதும், அவரது கணவர் மீதும் மோதியது. இதில் செல்வராணி அதே இடத்தில் பலியானார். ராஜேந்திரன் சின்னமனூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். காரில் இருந்த கிறிஸ்டியா மேரிக்கும் காயம் ஏற்பட்டது. சின்னமனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.