/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மேய்ச்சலுக்கு சென்ற 40 ஆடுகளை கடித்து கொன்ற காட்டு நாய்கள்
/
மேய்ச்சலுக்கு சென்ற 40 ஆடுகளை கடித்து கொன்ற காட்டு நாய்கள்
மேய்ச்சலுக்கு சென்ற 40 ஆடுகளை கடித்து கொன்ற காட்டு நாய்கள்
மேய்ச்சலுக்கு சென்ற 40 ஆடுகளை கடித்து கொன்ற காட்டு நாய்கள்
ADDED : மே 30, 2024 04:00 AM
மூணாறு: மூணாறு அருகே வட்டவடை ஊராட்சியில் சிலந்தியாறு பகுதியில் மேய்ச்சலுக்குச் சென்ற 40 ஆடுகளை காட்டு நாய்கள் கடித்துக் கொன்றன.
சிலந்தியாறு பகுதியில் வசிக்கும் கனகராஜ் ஆடு வளர்ப்பதை முக்கிய தொழிலாக செய்து வந்தார். அவர் 42 ஆடுகளை வளர்த்தார். அவை நேற்று முன்தினம் மேய்ச்சலுக்குச் சென்றன. அவற்றை மாலையில் வீட்டிற்கு கொண்டு வரச் சென்றபோது பலத்த காயங்களுடனும், பாதி தின்ற நிலையிலும் 40 ஆடுகள் இறந்து கிடந்தன. அவற்றை 20க்கும் மேற்பட்ட காட்டு நாய்கள் கடித்து குதறியதாக தெரியவந்தது.
இறந்த ஒவ்வொரு ஆடுகளும் 10 முதல் 20 கிலோ எடை கொண்டவையாக இருந்தன. அவற்றின் விலை மதிப்பு ரூ. 4 லட்சத்திற்கும் அதிகமாகும். அப்பகுதியில் இரு தினங்களுக்கு முன்பு காட்டு நாய்கள் பசுக்களை கடித்து குதறின. அதனை கண்ட சிலர் நாய்களை விரட்டியதால் பசுக்கள் உயிர் தப்பின.