/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வாழையை சேதப்படுத்திய காட்டு யானைகள்
/
வாழையை சேதப்படுத்திய காட்டு யானைகள்
ADDED : ஆக 01, 2024 05:33 AM

கூடலுார்: கூடலுார் அருகே வெட்டுக்காடில் தனியார் விளை நிலங்களுக்குள் புகுந்த காட்டு யானைகள் நூற்றுக்கணக்கான வாழை மரங்களை சேதப்படுத்தியது.
கூடலுார் அருகே வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள வெட்டுக்காடில் ஜீவானந்தம் என்பவருக்கு சொந்தமான வாழை தோட்டம் உள்ளது.
நேற்று முன்தினம் இரவு சுருளியாறு வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் இவரது விளைநிலத்திற்குள் புகுந்து நூற்றுக்கும் மேற்பட்ட வாழை மரங்களை சேதப்படுத்தியது. அறுவடை செய்ய இன்னும் ஒரிரு மாதங்களே உள்ள நிலையில் மரங்கள் முழுவதும் சேதப்படுத்தப்பட்டதால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பல இலவ மரங்களையும் உடைத்து சேதப்படுத்தியது.
இது குறித்து தோட்ட உரிமையாளர் ஜீவானந்தம் லோயர்கேம்ப் வனத்துறையிடம் புகார் தெரிவித்தார்.