/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாட்டுபட்டியில் கொஞ்சிய காட்டு யானைகள்
/
மாட்டுபட்டியில் கொஞ்சிய காட்டு யானைகள்
ADDED : மே 18, 2024 05:12 AM

மூணாறு : மாட்டுபட்டி அணையின் கரையோரம் இரண்டு காட்டு யானைகள் கொஞ்சி, குலாவி மகிழ்ந்ததை சுற்றுலா பார்த்து அதிசயித்தனர்.
யானைகளுக்கு பல்வேறு தனிக் குண அதிசயங்கள் உண்டு.
அவை பாசத்தை அதிகமாக வெளிப்படுத்தும். குறிப்பாக ஆண் யானைகளைவிட நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திக்கும் பெண் யானைகள் துதிக்கைகளால் கொஞ்சி, குலாவிய வண்ணம் பாசத்தை பொழியும்.
மூணாறு அருகே மாட்டுபட்டி அணையின் கரையோரம் தனித்தனியாக சுற்றித்திரிந்த ஆண், பெண் காட்டு யானைகள் எதிர்பாராத வகையில் சந்தித்தன.
அப்போது அவை வெகு நேரம் துதிக்கைகளால் பின்னி சண்டையிடுவது போன்ற தோற்றத்தில் கொஞ்சி, குலாவின. அதனை சுற்றுலா படகில் பயணித்த பயணிகள் ஏராளமானோர் பார்த்து அதிசயித்தனர்.

