/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
புல் மேடுகளில் காட்டு யானைகள்; சுற்றுலா பயணிகள் ரசிப்பு
/
புல் மேடுகளில் காட்டு யானைகள்; சுற்றுலா பயணிகள் ரசிப்பு
புல் மேடுகளில் காட்டு யானைகள்; சுற்றுலா பயணிகள் ரசிப்பு
புல் மேடுகளில் காட்டு யானைகள்; சுற்றுலா பயணிகள் ரசிப்பு
ADDED : மே 31, 2024 06:34 AM

மூணாறு : மாட்டுபட்டியில் தீவனத்திற்காக பசுமையான புல்மேடுகளில் சுற்றிதிரிந்த காட்டு யானைகளை சுற்றுலா பயணிகள் ரசித்தனர்.
மூணாறு அருகில் உள்ள மாட்டுபட்டி அணை முக்கிய சுற்றுலா பகுதியாகும். மாட்டுபட்டி பகுதியில் உள்ள அரசு சார்பிலான மாட்டு பண்ணைக்கு அணையின் கரையோரமும், பண்ணையை சுற்றிலும் 600 ஹெக்டரில் புல் வளர்க்கப்படுகிறது. அவை ஆண்டு முழுவதும் பசுமையாக காணப்படும் என்பதால் அங்கு வரும் காட்டு யானைகள் தீவனத்திற்காக நாள் கணக்கில் முகாமிடும். அதனை சுற்றுலா பயணிகள் ரசிப்பர். தற்போது அங்கு முகாமிட்டுள்ள இரண்டு காட்டு யானைகள் தீவனத்திற்காக பசுமையான புல்மேடுகளில் சுற்றித் திரிந்தன. சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்ததுடன் செல்பி உள்பட போட்டோ எடுத்து மகிழ்ந்தனர்.