/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
காட்டு பன்றி பலி ரூ.25 ஆயிரம் அபராதம்
/
காட்டு பன்றி பலி ரூ.25 ஆயிரம் அபராதம்
ADDED : ஜூன் 22, 2024 05:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: போடிமெட்டு செல்லும் முந்தல் ரோட்டில் 25 நாட்களுக்கு முன்பு வாகனம் மோதியதில் காட்டு பன்றி இறந்து கிடந்தது. போடி வனத்துறையினர் அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி., கேமரா மூலம் பார்த்ததில் காட்டுப் பன்றியை மோதியது டெம்போ வாகனம் எனவும், கேரளா ராஜகுமாரி பகுதியை சேர்ந்த வைசாக் 35, என தெரிந்தது.
சம்பந்தப்பட்ட நபருக்கு போடி ரேஞ்சர் நாகராஜ் மூலம் சம்மன் அனுப்பட்டது.
சம்மனை பெற்ற வைசாக் போடி வனத்துறை அலுவலகத்திற்கு நேற்று வந்து குற்றத்தை ஒப்புக் கொண்டார். வனத்துறை விதித்த ரூ.25 ஆயிரம் அபராதத்தை செலுத்தினார்.