/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போடி உச்சலுாத்து வனப்பகுதியில் காட்டுத்தீ; பல ஏக்கரில் மரங்கள் எரிந்து சேதம் வன விலங்குகள் இடம் பெயரும் அவலம்

ADDED : ஏப் 30, 2024 05:05 AM

போடி : போடி அருகே உச்சலுாத்து வனப்பகுதியில் பரவிய காட்டுத் தீயால் 25 ஏக்கரில் இருந்த மரங்கள் எரிந்து சேதமாயின. இதனால் வன உயிரினங்கள் பலியாகியும் இடம் பெயரும் நிலை ஏற்பட்டு உள்ளது.
போடி அருகே உத்தமபாளையம் வன கோட்டத்திற்கு உட்பட்ட ராசிங்கபுரம், சூலப்புரம் மேற்கே உச்சலுாத்து மலைப்பகுதியில் 500 ஏக்கருக்கு மேல் வனப்பகுதி உள்ளது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இங்கு உள்ள மரங்களுக்கு சமூக விரோத கும்பல் தீ வைக்கின்றனர். இப்பகுதியில் பல ஆண்டுகளாக மரப்பட்டை, மரங்கள் வெட்டி கடத்தப்படுவதும் நடந்து வருகிறது. கஞ்சா பயிரிடப்படுபவர்கள் கரி மூட்டம் போபடுபவர்கள், கால்நடை மேய்ப்பவர்கள் தீ வைத்து வருகின்றனர். தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தண்ணீரை தேடி வன விலங்குகள் மலை அடிவார பகுதிக்கு வர துவங்கி உள்ளன.
இந்நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு மேல் போடி அருகே ராசிங்கபுரம், சூலப்புரம் மேற்கே உள்ள உச்சலுாத்து வனப்பகுதியில் சமூக விரோத கும்பல் தீ வைப்பால் பரவிய காட்டுத் தீயால் விலை உயர்ந்த மரங்கள், மூலிகைச் செடிகள் எரிந்து சேதமாயின. வன உயிரினங்கள் பலியாவதோடு, வன விலங்குகள் இடம் பெயரும் நிலை ஏற்பட்டு உள்ளது. இப்பகுதி மிகவும் பள்ளமாக அமைந்து உள்ளதால் தீயை முழுவதும் அணைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் வனப்பகுதியில் பரவிய காட்டித் தீயை வனத்துறையினர் கூட்டு முயற்சியில் அணைக்க வேண்டும். அல்லது ஹெலிகாப்டரை பயன்படுத்தி தீயை அணைக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.