/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேர்தல் பிரசாரத்தில் சூடுபிடிக்கும் வனவிலங்கு பிரச்னை
/
தேர்தல் பிரசாரத்தில் சூடுபிடிக்கும் வனவிலங்கு பிரச்னை
தேர்தல் பிரசாரத்தில் சூடுபிடிக்கும் வனவிலங்கு பிரச்னை
தேர்தல் பிரசாரத்தில் சூடுபிடிக்கும் வனவிலங்கு பிரச்னை
ADDED : ஏப் 11, 2024 06:38 AM
மூணாறு : இடுக்கி லோக்சபா தொகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் குறித்து காங்., மற்றும் மா.கம்யூ., இடையே பனிப்போர் நடக்கிறது.
இடுக்கி மாவட்டத்தில் காட்டு யானை உள்பட வனவிலங்குகளின் நடமாட்டத்தால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அப்பிரச்னை லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் முக்கிய இடம் பிடித்துள்ளது. காங்கிரஸ், மா.கம்யூ., ஆகியோர் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இடதுசாரி கூட்டணி வேட்பாளர் ஜோய்ஸ்ஜார்ஜை ஆதரித்து பிரசாரம் செய்த மா.கம்யூ., மாநில செயலாளர் கோவிந்தன் கூறுகையில்., மாநில அரசு வனவிலங்கு தொந்தரவை கட்டுப்படுத்த எல்லையுள்ளது.
அதற்கு மாநில அரசு அளித்த ரூ.620 கோடி மதிப்பிலான திட்டத்தை மத்திய அரசு நிராகரித்தது. மனிதர்களை தாக்க வரும் வனவிலங்குகளை துப்பாக்கியால் சுட்டு கொல்ல வேண்டும், என்றார்.
அதற்கு பதிலளிக்கும் வகையில் காங்., கூட்டணி வேட்பாளர் டீன் குரியா கோஸை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட காங்., மாநில துணைத் தலைவர் ஹசன் நிருபர்களிடம் கூறுகையில், இடுக்கி மாவட்டத்தில் வனவிலங்கு தாக்குதலை தடுக்கும் வகையில் நிரந்தர தீர்வு காணுவதில் மாநில அரசு தோல்வியுற்றது.
தாக்குதல் சுபாவம் கொண்ட வனவிலங்குகளுக்கு பதில் மயங்க முற்று கிடக்கும் வனத்துறை அமைச்சருக்கு மயக்க ஊசி செலுத்த வேண்டும். மாநிலம் முழுவதும் வனவிலங்குகளின் அச்சுறுத்தல் உள்ளது.
மனித உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வனவிலங்குகளை துப்பாக்கியால் சுட்டு கொல்ல வேண்டும் என்பது காங்., கூட்டணியின் கருத்து, என்றார்.

