/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தி.மு.க., பிரசாரத்தில் முன்னாள் எம்.எல்.ஏ., ஆசையன் புறக்கணிப்பா? ஆதரவாளர்கள் அதிருப்தி
/
தி.மு.க., பிரசாரத்தில் முன்னாள் எம்.எல்.ஏ., ஆசையன் புறக்கணிப்பா? ஆதரவாளர்கள் அதிருப்தி
தி.மு.க., பிரசாரத்தில் முன்னாள் எம்.எல்.ஏ., ஆசையன் புறக்கணிப்பா? ஆதரவாளர்கள் அதிருப்தி
தி.மு.க., பிரசாரத்தில் முன்னாள் எம்.எல்.ஏ., ஆசையன் புறக்கணிப்பா? ஆதரவாளர்கள் அதிருப்தி
ADDED : ஏப் 03, 2024 07:15 AM
ஆண்டிபட்டி : தேனி தொகுதி தி.மு.க., வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் நேற்று ஆண்டிபட்டி ஒன்றியத்தில் மேற்கொண்ட பிரசாரத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.,வை காணவில்லை. இதனால் அவரது ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஆண்டிபட்டி ஒன்றியத்தில் தி.மு.க., வேட்பாளர் பிரசாரத்தில் எம்.எல்.ஏ., மகாராஜன் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இத் தொகுதியில் 1989 -19-91, 1996 --2001ல் ஆண்டிபட்டி ஆசையன் எம்.எல்.ஏ.,வாக இருந்தார். தனது பேச்சு திறமையால் கடந்த காலங்களில் தி.மு.க., சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ததோடு தேர்தல் பணிகளிலும் ஈடுபாடு காட்டி வந்தார். வழக்கறிஞரான ஆசையன் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் பங்கேற்கவில்லை. பிரசாரத்திற்கு முறையான அழைப்பு இன்றி தி.மு.க., வினரால் ஓரம் கட்டப்பட்டுள்ளாரா அல்லது தேர்தல் பணிகளில் ஒதுங்கி விட்டாரா என்று தெரியாமல் அவரது ஆதரவாளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
2001ல் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வாக இருந்த தங்க தமிழ்ச்செல்வன், ஜெயலலிதா ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிடுவதற்காக தனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார். 2002ம் ஆண்டு ஆண்டிபட்டி தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட வைகை சேகரும் தற்போது தி.மு.க., பிரசாரத்தில் இல்லை. இவர்கள் இருவரும் ஆண்டிபட்டி சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தங்களுக்கான ஆதரவாளர்களை இன்றளவும் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தி.மு.க., வில் தீவிர விசுவாசத்தோடு இருந்த பலருக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் எழுந்துள்ளது.

