/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனி ஆவின் பால் கொள்முதலை அதிகரித்து புத்துயிர் பெறுமா; வரத்து குறைந்ததால் சுருங்கிய குளிரூட்டும் நிலையம்
/
தேனி ஆவின் பால் கொள்முதலை அதிகரித்து புத்துயிர் பெறுமா; வரத்து குறைந்ததால் சுருங்கிய குளிரூட்டும் நிலையம்
தேனி ஆவின் பால் கொள்முதலை அதிகரித்து புத்துயிர் பெறுமா; வரத்து குறைந்ததால் சுருங்கிய குளிரூட்டும் நிலையம்
தேனி ஆவின் பால் கொள்முதலை அதிகரித்து புத்துயிர் பெறுமா; வரத்து குறைந்ததால் சுருங்கிய குளிரூட்டும் நிலையம்
ADDED : பிப் 15, 2025 06:35 AM
தேனி: தேனி ஆவினில் பால் வரத்து குறைந்ததால் தொழில் பேட்டையில் உள்ள 1.30 லட்சம் லிட்டர் பால் குளிரூட்டும் மையம் முடங்கி வருகிறது. பல ஊர்களில் அமைக்கப்படும் பி.எம்.சி.,க்கள் இயந்திரங்கள் முறையாக பயன்பாடுத்தாமல் திறந்த வெளியில் போடப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்து கால்நடை வளர்ப்பு பிரதானமாக நடைபெறுகிறது. விவசாயிகளிடம் ஆவின் பால் கொள்முதல் செய்கிறது. கடந்த ஆண்டுகளில் மதுரை ஆவினுடன் தேனி மாவட்டம் இணைந்து இருந்த போது தினமும் ஒரு லட்சம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் செய்து ஆவினுக்கு பெரும் பங்களிப்பாக தேனி விளங்கியது. சில ஆண்டுகளுக்கு முன் தேனி ஆவின் உருவாக்கப்பட்டது.
தேனி தொழிற்பேட்டையில் ஆவின் குளிரூட்டும் நிலையத்தில் 1.30 லட்சம் லிட்டர் பால் குளிரூட்டும் வகையில் வசதி மேம்படுத்தப்பட்டது. தேனி ஆவினில் கூடுதல் பணியாளர்கள் நியமனம், சம்பளத்திற்காக மாதந்தோறும் பல லட்சம் செலவு என நிர்வாக குளறுபடியால் நிதி இழப்புகள் தொடர்ந்தது. அதே சமயம் தனியாரை சமாளிக்க முடியாமல் உற்பத்தி குறைந்தது.
இந்நிலையில் மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்து பாலை தேனி குளிரூட்டும் நிலையத்திற்கு கொண்டு வந்து எடுத்து செல்வதில் சிரமம் என கருதி சில ஊர்களில் 4 ஆயிரம் முதல் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுகளில் (பி.எம்.சி.,) மொத்த பால் குளிரூட்டும் சென்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அவையும் சில ஊர்களில் முழுமையாக பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. பெரியகுளம் பால் கூட்டுறவு சங்கத்தில் பல லட்ம் மதிப்பிலான குளிரூட்டு இயந்திரங்கள் திறந்த வெளியில் வைத்து வெயில்,மழையில் நனைத்து வீணாகி வருகிறது.
இச் சூழலில் தனியார் பால் நிறுவனங்கள் கூடுதல் விலை கொடுத்து தினமும் 2 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்கிறது. ஆவினுக்கு பால் வழங்கிய உற்பத்தியாளர்கள் பலரும் தனியாருக்கு தாவினர்.
இதனால் ஆவின் பால் உற்பத்தி மளமளவென சரிந்தது. தற்போது ஆவின் 60 ஆயிரம் லிட்டருக்கும் குறைவாக கொள்முதல் செய்கிறது. இதனால் தேனியில் 1.30 லட்சம் லிட்டர் குளிரூட்டும் நிலையத்தின் பயன்பாடு குறைந்து வெறும் 15 ஆயிரம் லிட்டர் குளிரூட்டுகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் ஆவின் பால் கொள்முதலை அதிகப்படுத்தவும், குளிரூட்டும் இயந்திரங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து ஆவின் புத்துயிர் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என உற்பத்தியாகளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.