/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ரோடு வசதி இன்றி மலைக்கிராம மக்கள் சிரமம்
/
ரோடு வசதி இன்றி மலைக்கிராம மக்கள் சிரமம்
ADDED : மே 26, 2024 04:37 AM
போடி,: போடி கொம்புதூக்கி அய்யனார் கோயிலில் இருந்து கண்ணகி கோயில் வழியாக கொட்டகுடிக்கு ரோடு வசதி இல்லாததால் விவசாயிகள் விளை பொருட்களை கொண்டு வர சிரமம் அடைகின்றனர்.
போடி ஒன்றியம், கொட்டகுடி ஊராட்சிக்கு உட்பட்டது கொம்புதூக்கி மலைக்கிராமம். இப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் உள்ளன. 1200 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் உள்ளது. இலவம், காபி, எலுமிச்சை, தென்னை போன்ற பயிர்கள் பயிரிடப்பட்டு உள்ளன. கொட்டகுடி பகுதியில் வசிக்கும் மக்களின் குலதெய்வமான கொம்புதூக்கி அய்யனார் கோயிலுக்கு வரவும், கண்ணகி கோயிலுக்கு செல்ல ரோடு வசதி இல்லாமல் உள்ளன. இப்பகுதியில் விளையும் விலை பொருட்களை கொண்டு வர ரோடு வசதி இன்றி தலைச் சுமையாக கொண்டு வர வேண்டிய நிலையில் சிரமம் அடைந்து வருகின்றனர். பொதுமக்கள் சிரமத்தை தவிர்க்கும் வகையில் கொம்புதூக்கி அய்யனார் கோயிலில் இருந்து கண்ணகி கோயில் வழியாக கொட்டகுடிக்கு ரோடு வசதி செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.